தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டமானது நவம்பர் 27-ம் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் கொண்டுவரும் உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லயோலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னத்திரை நடிகர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு தடை கோரிய இந்த வழக்கில் பொதுச் செயலாளர் விஷாலுக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 25-ம் தேதிக்குள் விஷால் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments