ரஜினிகாந்த், கமல் ஹாசன் நட்பில் ஒரே துருவமானாலும் நடிப்பை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கிகள் என பல திரையுலக பிரபலங்கள் சொல்வதுண்டு.
திறமையில் சிறந்து விளங்கும் இவர்களின் வாழக்கையில் மிகவும் திருப்பமாக அமைந்த மிக முக்கிய படம் தான் இன்று ஹைலைட்.
திரையுலகில் மிக முக்கியமான கே. பாலச்சந்திரன் சிறந்தபடங்களில் ஒன்று அபூர்வ ராகங்கள். இது சூப்பர்ஸ்டாருக்கு அறிமுக படமானாலும், கமலுக்கு உலகநாயகன் என்ற பெருமையை தந்தது.
இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. ஒரு இளம் ஆண் வயதை தாண்டிய பெண்ணையும், இளம் பெண் வயதுமீறிய ஆணை காதலிப்பது தான் கதைக்களம்.
இந்த படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த கதை என்னுடையது என எழுத்தாளர் தாசன் கே.பாலச்சந்தர் மீது நீதிமன்றத்தில் திருட்டு கதை வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நீண்ட காலம் போக எழுத்தாளர் கொடுத்த கதையை படித்த பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் இயக்குனருக்குக்கு 1000 ரூபாய் அபராதமும் விதித்தாராம். ஆனால் எழுத்தாளர் அபராதம் எதுவும் வேண்டாம். கதை என்னுடையது என தீர்ப்பு கூறியதே போதும் என சொன்னாராம்.
இதை நீதிபதி மறுக்க இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் அபராத தொகையை பெற்று எழுத்தாளர் தாசனிடம் ஒப்பைடைத்தது.
இப்படியாக ரஜினி, கமல் நடித்த அபூர்வ ராகங்கள் படத்திற்கு பின்னல் மறக்க முடியாத நிகழ்வும் இருக்கிறது.
No comments