பிரபல தெலுங்கு திரையுலகின் பிரபலமான இயக்குனர் கே.வி,விஜயேந்திர பிரசாத்தின் மகன் இயக்குனர் ராஜமௌலி என்பது நாமறிந்ததே.
2001- இல் ஸ்டுடென்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். இவர் 10 படங்களுக்கு மேல் எடுத்துது மட்டுமில்லாமல் நிறைய படங்ககளை ஹிந்தி மற்றும் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.
கடந்த வருடம் பிரம்மாண்ட பொருட்செலவில் இவர் எடுத்த பாகுபலி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பாகுபலி இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
தற்போது ராஜமௌலியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைப்பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது, மேலும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
மேலும், ஒரு இயக்குனர் பிறந்தநாளையே இந்திய அளவில் ட்ரண்ட் செய்கிறார்கள் என்றால் ராஜமௌலியை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
No comments