கீர்த்தி சுரேஷ்க்கு வழக்கத்தை விட தற்போது அதிக வரவேற்புகளும் பாராட்டுகளும் குவிந்துள்ளது.
காரணம் அவருடைய நடிப்பு என்பதை ரெமோ படம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
கீர்த்தி இந்த படத்தில் அழகாக இருக்கிறார் என்று தொடர்ந்து ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அவர் தன் குடும்பத்தினரோடு சென்னையில் உள்ள தியேட்டரில் ரெமோ பார்த்தபோது கீர்த்தி சுரேஷ் வரும் சீன்களில் ரசிகர்களின் கைதட்டல், கோஷம் பயங்கரமாக இருந்ததாம்.
இதை பார்த்த அவரது அம்மா, கீர்த்தியிடம் இயற்கையாகவே நீ அழகு, இந்த படத்தில் உன்னை லட்டு போல அழகாக காட்டியிருக்கிறார்கள் என்றாராம்.
ரெமோ சக்ஸஸ் மீட்டில் இதை சொன்ன கீர்த்தி, இதற்காக ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமுக்கு மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தார்.
No comments