விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களாக தான் பார்த்து நடிப்பார். அதேபோல் தான் இவரின் தயாரிப்பு படங்களும் கூட, ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை இவர் தயாரித்து நடித்தார்.

இந்த படம் பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டது, தற்போது இவர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மேற்கு தொடர்ச்சி மலை, இப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார்.
மேலும், இப்படத்திற்கு இசை இளையராஜா, இந்த படம் கேரளாவில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

No comments