ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா

ஜி.வி.பிரகாஷ் வரிசையாக படங்களாக நடித்து அடுக்கிக்கொண்டே போகிறார். தற்போதே கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லீ, அடங்காதே, ராஜிவ்மேனன் இயக்கும் படம் என 4 படங்கள் கையில் உள்ளது.

இவர் அடுத்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் வெங்கட் இயக்கவுள்ளார்.
ஜி.வியுடன் முதன் முறையாக சதீஷ் கைக்கோர்க்க, படத்திற்கு 4G என்று தலைப்பு வைத்துள்ளனர், எப்போதும் வித்தியாசமான தலைப்பையே படத்தின் டைட்டிலாக வைப்பது தான் ஜி.வி ஸ்டைல் போல.

No comments