கபாலி பட நடிகருக்கு கிடைத்த பாலிவுட் பட வாய்ப்பு

ரஜினியின் கபாலி படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் மறக்கவே முடியாது. ஒவ்வொரு வேடத்தில் நடித்தவர்களும் கதைக்கு முக்கியமான பங்கை கொடுத்திருப்பர்.

தற்போது கபாலி படத்தில் நடித்த விஷ்வநாத் அவர்களுக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரில்லர் கதையான இந்த படத்தை அறிமுக இயக்குனர் சஜோஸ் இயக்க இருக்கிறார்.
இதுபற்றி விஷ்ஷவநாத் கூறும்போது, படத்தில் என்னுடைய காட்சிகள் மட்டும் தமிழில் வரும். இந்த திரில்லர் கதையை மும்பை மற்றும் பெங்களூரில் படமாக்க இருக்கின்றனர்.
இயக்குனர் சஜோஸ் கபாலி படத்தை பார்த்துவிட்டு, இப்படத்தில் இருக்கும் கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்று கருதி என்னை இப்படத்தில் கமிட் செய்துள்ளார் என்றார்.

No comments